News January 4, 2026

தோனியின் ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா?

image

ஐசிசியின் மூன்று முக்கியக் கோப்பைகளையும் வென்ற இந்திய அணியின் Ex கேப்டன் தோனிக்கு ₹70,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வீரர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஏற்ப BCCI ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்கிறது. அதன்படி 90 டெஸ்ட், 350 ODI, 98 டி20 போட்டிகளில் விளையாடிய தோனிக்கு அதன் அடிப்படையில் இந்த ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

Similar News

News February 1, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹1 லட்சம் குறைந்தது!

image

கடந்த ஒரு வாரத்தில் (ஜன.26 – பிப்.1) மட்டும் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ₹1.05 லட்சம் குறைந்துள்ளது. ஆனால், வாரம் தொடங்கியது முதலே கிலோவுக்கு ₹50,000 வரை அதிகரித்த வெள்ளி விலை, கடந்த 2 நாள்களாக குறைந்துள்ளது. இதன்படி, ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு வெள்ளி விலை ₹105 வரை குறைந்து ₹320-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையும் குறைந்துள்ளதால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.

News February 1, 2026

இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாறும்: எலான் மஸ்க்

image

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு சக்தி வாய்ந்ததாக மாறி வருவதாக எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். சமீபத்திய IMF தரவுகளின்படி, உலக வளர்ச்சியில் இந்தியா 17% பங்களிப்பைக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவை விட (9.9%) மிகவும் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார. மேலும், உலகின் பொருளாதார சக்தி இப்போது கிழக்கு நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News February 1, 2026

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!

image

U19 WC பாக்.,க்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய பாக்., அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்களில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸி., ஆப்கன் & இங்கி., ஆகியவை ஏற்கெனவே அரையிறுதிக்கு தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.

error: Content is protected !!