News June 26, 2024

தோட்டக்கலை துறை மூலம் தென்னங்கன்றுகள்

image

தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வேப்பந்தட்டை வட்டம் வெண்கலம் அரசு பண்ணையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தேவையான காய்கறி பயிர் நாற்றுகள், பழகன்றுகள், தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது. ஒரு கன்றுக்கு ரூ. 60 செலுத்தி விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

பெரம்பலூர்: தெரு நாய் கடித்து மான் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமப் பகுதிக்குள் பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. இந்த மானை அப்பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலை அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து மானை முருக்கன்குடி காப்பு காட்டில் புதைத்தனர்.

News March 1, 2026

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

பெரம்பலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!