News November 27, 2025
தோகைமலை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை!

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி கூலி தொழிலாளி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மனவருத்தத்தில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் தற்கொலையா, கொலையா என சந்தேக நிலையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News November 28, 2025
கரூர்: இனி அலைய தேவையில்லை!

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், www.tnpds.gov.in இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு SHAER பண்ணுங்க!
News November 28, 2025
கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
கரூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


