News September 3, 2025
தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்

புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.,8-ம் தேதி தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அதில் 10, 12, பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகையுடன் சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
புதுக்கோட்டை: 10th போதும்.. காவல்துறையில் வேலை

புதுகை மக்களே POLICE ஆக ஆசையா?.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
News September 4, 2025
புதுக்கோட்டை: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
News September 4, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் தனியார் மஹால், அரிமளம் கீழப்பனையூர் சமுதாயக்கூடம், அன்னவாசல் கீழக்குறிச்சி சமுதாயக்கூடம், விராலிமலை மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று (செப்.4) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதில், 15 அரசு துறைகள் சார்பில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.