News May 19, 2024

தொழில் பயிற்சிமுகாம் – இளைஞர்களுக்கு அழைப்பு

image

வல்லத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 20ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்தும், 21ஆம் தேதி வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்தும், 22ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்தும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதற்கு முன்பதிவு அவசியம் இல்லை. தொழில் முனைவோர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

தஞ்சையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

பிரதமர் மோடி பங்கேற்கும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 06) தஞ்சையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்குப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

News March 7, 2026

தஞ்சாவூர்: 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி!

image

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என ஆசை காட்டி 34 பேரிடம் சுமார் ரூ.1.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் ஆசிரியர்கள், விவசாயிகள், தனியார் ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அடுத்து, தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் 34 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

image

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட‌ பாலம் கட்டும் பணிகள்‌ நடைபெற‌ உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!