News April 8, 2025
தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் துவங்க விரும்புவோர் www.exwel.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
போலி துனை வட்டாட்சியர் முத்திரை; ஒருவர் கைது

சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தனது 3 கூட்டாளிகளுடன் இணையந்து பல நில மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் இடத்திற்கு அருகாமையில் இருந்த 15 செண்ட் புறம்போக்கு நிலத்தை போலி சான்றிதழ்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் விஜயன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் போலீசார் கைது செய்தனர்.
News April 16, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
மணிமுக்தா அணை மீன்பாசி குத்தகை விண்ணப்ப படிவங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை நீர்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்படுகிறது இணையவழி ஏலம் நடக்கும் பங்கேற்க விரும்புவோர் ஒப்பந்தப்புள்ளி படிவம் உள்ளிட்ட இதர படிவங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் 19494/எப்3/2024/9 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை வரும் 22ம் தேதி பகல் 2:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.