News September 1, 2025

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் ‘ஆப்சென்ட்’

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் கொள்குறி வகை தேர்வு நேற்று(ஆக.31) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு 3 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. காலை 9:30 மணி முதல் பகல் 12:30 வரை நடந்த தேர்வை 1,973 பேர் எழுதினர். 1,027 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Similar News

News September 4, 2025

விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு<<>> கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (செப்.03) நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர். சமர்ப்பித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்தார்

error: Content is protected !!