News December 9, 2024
தொழிலை நாசம் செய்யும் மத்திய அரசு – திருப்பூர் எம்பி

திருப்பூரில், எம்.பி சுப்பராயன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வாடகை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது மூலம், திருப்பூரில் உள்ள, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மிகப்பெரும் பாதிப்பை அடையும். ஏராளமானவருக்கு தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய, ஜவுளி தொழிலை, பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில், உயர்த்தப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரி, தொழிலை நாசம் செய்யும்” என தெரிவித்துள்ளார்
Similar News
News March 11, 2026
திருப்பூரில் சோக சம்பவம்!

திருப்பூர் காந்திநகரை அடுத்த சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவருடைய மகன் விக்னேஷ் (22). இவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முந்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விக்னேஷ் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
News March 11, 2026
வெள்ளகோவில் அருகே பயங்கர விபத்து

வெள்ளக்கோவில் – மூலனூர் சாலை கரட்டுப்பாளையம் அருகே நேற்று மாலை 6:25 மணிக்கு ஈச்சர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புள்ளச் செல்லிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் படுகாயமடைந்து, காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 11, 2026
திருப்பூர்: இரவு நேர காவல்துறை ரோந்து விபரம்

திருப்பூர் மாநகரில் இன்று (10/03/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மக்கள் தங்கள் பகுதியில் குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்.


