News January 14, 2025

தொழிலாளர் துறை கட்டடம் திறப்பு விழா

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ரூ.4.44 கோடியில் தொழிலாளா் துறை ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, நிகழ்ச்சியில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா். எம்.பி கே.நவாஸ்கனி, MLA காதா்பாட்சா முத்துராமலிங்கம், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News

News December 11, 2025

ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலைய விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

ராமநாதபுரம்: 4 நாட்களாக மீனவரை தேடும் பணி

image

தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தய்யா. இவரது மகன் ஆரோக்கிய கிங்ஸ் 25, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகில் டிச.,6ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்துள்ளார். மீனவர்கள் அப்பகுதியில் 4 நாட்களாக தேடி வருகின்றனர். இந் நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமிர்தய்யா குடும்பத்தினருடன் வந்து நேற்று மனு அளித்தார்.

News December 11, 2025

பரமக்குடி கார் விபத்தில் மேலும் ஒருவர் பலி

image

திருப்பூரை சேர்ந்த ராஜ்குமா் நேற்று முன்தினம் தனது குடும்பதினருடன் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார்.எதிரில் பரமக்குடியில் இருந்து மானாமதுரை நோக்கி மற்றொரு காரில் சீனிவாசன் தனது மகளுடன் சென்றார் சீனிவாசன் முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது மீடியன் மீது ஏறி எதிரே வந்த ராஜ்குமார் காருடன் மோதியது. விபத்தில் சீனிவாசன் இறந்தார். இந்நிலையில் சிகிச்சையிலிருந்த ராஜ்குமார் சகோதரி அம்பிகா இறந்தார்.

error: Content is protected !!