News January 24, 2025

தொழிற் பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் – காஞ்சிபுரம் (2024-25)

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அறிவிப்பின் படி, தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் 31.01.2025 அன்று ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 1,500 இடங்கள் நிரப்பப்படுகின்றன. விவரங்களுக்கு dadskillkpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 17, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்.16 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பிறந்தநாள் வாழ்த்து

image

நாளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பி.எம்.கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கும், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் உயர்த்தி கொடுத்ததற்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாய மக்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரில் மோடியின் பெயரை வரைந்து வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தனர்.

News September 16, 2025

காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்றத்தூர் ஒன்றியத்தில் சேக்கிழார் நகர், வரதராஜபுரம் ஊராட்சி மற்றும் பூந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் கிளாய் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!