News August 8, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு வரும் ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாத உதவித்தொகை ரூ‌.750, சீருடை, காலணி, பஸ் பாஸ் உள்ளிட்ட 10 வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.

Similar News

News August 8, 2025

6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை – இபிஎஸ்

image

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய இபிஎஸ் தி.மு.க., ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக தெரிவித்தார்.

News August 8, 2025

இருக்கன்குடி கோவில் திருவிழா கொடியேற்றம்!

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று ஆக.8 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கோவில் அறங்காவலர்கள் குழுத்தலைவர், செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

News August 8, 2025

விருதுநகர்: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணம் கேக்றாங்களா? CALL

image

விருதுநகர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

error: Content is protected !!