News September 2, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

image

தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) மேளா சேர்க்கை முகாம் (செப்.08) அன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சி மேளா முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.

Similar News

News April 6, 2026

தென்காசி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

தென்காசி: பெண் தோழியை அழைத்து சென்றவரின் கார் எரிப்பு

image

கடையநல்லூர் அருகே, பள்ளித் தோழியை காரில் அழைத்துச் சென்ற நண்பரைத் தாக்கி, அவரது காரை எரித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவிழாவிற்கு வந்த சின்னத்துரை என்பவர் தனது தோழியுடன் காரில் சென்றதை ஒரு கும்பல் வழிமறித்து கண்டித்துள்ளது. வாக்குவாதம் முற்றவே, அவர் வந்த பொலிரோ காரைப் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 20 பேரை தேடி வருகின்றனர்.

News April 6, 2026

தென்காசி: சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. காமுகன் கைது

image

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு மீனாட்சிபுரம் சாலையில் தங்கதுரை என்ற நபருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரு குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டு காலமாக தங்கி பணியாற்றி வந்த நிலையில், அந்த குடும்பத்தின் 13 வயது சிறுமிக்கு தங்கதுரை பாலியல் தொல்லைஅளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பள்ளி ஆசிரியை மூலம் அளித்த புகாரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!