News July 8, 2024
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 15ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று (ஜூலை 8) தெரிவித்துள்ளார். அதன்படி 2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
தூத்துக்குடி: பாலியல் வழக்கில் முதியவருக்கு சாகும் வரை ஆயுள்

2020ம் ஆண்டு திருச்செந்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை தூத்துக்குடியை சேர்ந்த தங்கபாண்டி என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அச்சிறுமியின் பெற்றோரை தங்கபாண்டியின் மகன், மகள் மிரட்டியுள்ளனர். இது சம்பந்தமாக திருச்செந்தூர் போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தங்கபாண்டிக்கு மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
News January 24, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News January 23, 2026
தூத்துக்குடி: ரூ.555 செலுத்தினால்., ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அனுகவும். இதனை SHARE IT.


