News March 1, 2026

தொழிற்சாலையில் வெடிவிபத்து.. 15 பேர் மரணம்!

image

மகாராஷ்டிராவின் நாக்பூர் அருகே ரால்கோனில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

விவாகரத்து.. திடீரென வைரலாகும் விஜய் PHOTOS

image

கடந்த இரண்டு நாள்களாகவே நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து தொடர்பாக வெவ்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. நடிகை ஒருவரை சுட்டிக்காட்டி விவாகரத்து பெறுவதாக சங்கீதா குறிப்பிட்டுள்ள நிலையில், இது அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் என விஜய்யின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், சோஷியல் மீடியாவில் விஜய் – சங்கீதாவின் திருமண போட்டோக்களை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

News March 1, 2026

CINEMA 360: நாளை சூர்யா 46 ட்ரீட்

image

சூர்யாவின் 46-வது படத்தின் பர்ஸ்ட் லுக் & டைட்டில் நாளை காலை 10:18 மணிக்கு வெளியாகவுள்ளது *‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது *பெரும் வெற்றி பெற்ற ‘With love’ படம் வரும் 6-ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது *கடந்த 27-ம் தேதி ரீ-ரிலீசான விஜய்யின் ‘தெறி’ இரண்டு நாள்களில் வெறும் ₹90 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளதாம்.

News March 1, 2026

3 நாள்கள்.. அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை

image

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

error: Content is protected !!