News March 30, 2025
தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து

காஞ்சிபுரம் சாலையில் உள்ள அழிஞ்சில் பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடி சத்தத்துடன் மேலும் தீ பரவிய நிலையில் தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
Similar News
News February 3, 2026
தி.மலை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News February 3, 2026
ஆரணியில் தூக்கி வீசப்பட்டு பலி

ஆரணியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கடந்த 31-ந் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் முருகன் (66) மீது மேல் மோகன் என்பவர் ஓட்டி வந்த பைக் அதிவேகமாக மோதியது. இதில் மோகனன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 3, 2026
தி.மலை: கை, கால்களை எடுத்து விடுவேன்…Ex MLA டென்ஷன்

தி.மலை மாவட்டம் ஆரணியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ தடுத்து நிறுத்திய நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தை கோயிலுக்கு பெற்றுத்தருமாறு RDO அலுவலகத்தில் கோயில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு கல் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் திமுக எம்.எல்.ஏ சிவானந்தம், மீறி பணியை தொடர்ந்தால் கை, கால்களை எடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


