News November 6, 2025

தொப்பூர்: உடல் நசுங்கி வாலிபர் பலி!

image

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள இரட்டை பாலம் அருகே நேற்று (நவ.05) கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஹீமான்சூ (35) என்பவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பின் வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

தருமபுரி: மதுபோதையில் அட்டூழியம்; போலீசார் அதிரடி!

image

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (44). இவர் மதுபோதையில் அந்த பகுதியில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இதேபோல எலங்காலப்பட்டியை சேர்ந்த ராமர் (60) என்பவரும் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை தொந்தரவு செய்த 2 பேரையும் கைது செய்தனர்.

News February 2, 2026

தருமபுரி: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தருமபுரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

தருமரியில் வசமாக சிக்கிய வாலிபர்!

image

ஒட்டப்பட்டி ஏரிக்கரை பகுதியில் போலீசார் நேற்று (பிப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் எட்டிமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20) தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!