News March 27, 2024

தொண்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

image

தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.

Similar News

News February 10, 2026

முதுகுளத்தூர் வீரர் உலக கோப்பை போட்டிக்கு தேர்வு

image

முதுகுளத்தூரை சேர்ந்த இந்திய லங்காடி அணி தலைவர் தேவசித்தம் உலக கோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் மகாராஷ்டிரா, கார்நாடக, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 வீரர்கள் பூடான் நாட்டில் அக்டோபரில் நடைபெற உள்ள உலக கோப்பை லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக கோப்பை நடத்த ஆசிய லங்காடி கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

News February 10, 2026

ராமநாதபுரம்: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இருந்தால், பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி, பிற தேவையின் போது ஆதார் அவசியமாகும். இதற்காக நீங்க அலைச்சல் இல்லாமல் வாங்க எளியவழி உள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்யுங்க. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கண்விழி கைரேகை தேவையில்லை. உங்க வீட்டுக்கே ஆதார் கார்டு வந்துடும். பயனுள்ள தகவல் உடனே SHARE பண்ணுங்க.

News February 10, 2026

ராமநாதபுரம்: ஊர்க்காவல் படையில் வேலை!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை & மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு. ஊர்க்காவல் படையில் (2 பெண்கள்) 52 பேரும், கடலோர பாதுகாப்பு படையில் 40 இளைஞர்களும் தேர்வு செய்யப்படுவர். 18-50 வயது – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். (பிப்.18 – தேர்வு) SHARE

error: Content is protected !!