News May 15, 2024

தொண்டரணி நிர்வாகியை பாராட்டிய முன்னாள் அமைச்சர்

image

நெல்லை மாவட்டத்திற்கு நேற்று (மே 14) பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா வருகை தந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் வைத்து கட்சியினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானியின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் உடனிருந்தார்.

Similar News

News April 7, 2026

நெல்லையில் நாளை TVK தலைவர் விஜய் பிரசாரம்

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள நெல்லை காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரண்டு இடங்களை தேர்வு செய்து மனு அளித்த நிலையில் போலீசார் ஆய்வு செய்து அனுமதி வழங்கி உள்ளனர்.

News April 7, 2026

நெல்லை: விவசாயி வெட்டிக் கொலை; குற்றவாளிக்கு தண்டனை

image

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2019ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராஜகோபால் (56) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக அம்பை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கணேசனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

News April 6, 2026

BREAKING நெல்லையில் நிபந்தனையுடன் விஜய்க்கு அனுமதி

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெல்லையில் வருகின்ற ஏப்.8 அன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு 19 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி இன்று வழங்கியுள்ளது‌.

error: Content is protected !!