News May 17, 2024
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டையில் இருந்து பள்ளபட்டி செல்லும் வழியில் உள்ள விவசாய இடங்களில் கிணற்றில் போதிய நீர் இல்லாமல் முருங்கை செடிகள் அனைத்தும் வாடிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் காய்ந்த செடிகள் அனைத்தும் மீண்டும் துளிர் விட துவங்கியதால் இன்று விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
News November 7, 2025
திண்டுக்கல்லில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/GTEResultAUG2025.php என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திண்டுக்கல், ஆத்தூர் ,நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


