News August 5, 2025
தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகல் வரை வெயில் அடித்தாலும் பிற்பகலை தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதித்துள்ளது.
Similar News
News August 6, 2025
மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.
News August 6, 2025
ராஜபாளையத்தில் எடப்பாடியின் நாளைய கூட்டங்கள் ரத்து

’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நாளை(ஆக.7) ராஜபாளையம் வர உள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலநிலை மாற்றத்தால் உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே உடல்நலனை கருதி ராஜபாளையத்தில் நாளை காலை பங்கேற்க இருந்த உள்அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News August 6, 2025
விருதுநகர்: 16 இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக உயர்வு

▶️ஆமத்தூர்
▶️மாரனேரி
▶️எம்.புதுப்பட்டி
▶️மல்லாங்கிணர்
▶️பந்தல்குடி
▶️கீழராஜகுலராமன்
▶️சாத்தூர் தாலுகா
▶️அம்மாபட்டி – அப்பைநாயக்கன்பட்டி இணைப்பு
▶️ஏழாயிரம்பண்ணை
▶️ஆலங்குளம்
▶️மம்சாபுரம் – வன்னியம்பட்டி
▶️ஸ்ரீவி டவுன்- தலுகா
▶️நத்தம்பட்டி – கூமாபட்டி
▶️எம்.ரெட்டியாபட்டி – பரளச்சி
▶️நரிக்குடி – ஏ.முக்குளம்
▶️வீரசோழன் – கட்டனூர்