News October 21, 2025

தொடர் கனமழை: நீலகிரியில் இன்றும் ரத்து!

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், இன்றும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News October 21, 2025

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

image

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணி கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகள் கல்லூரி மாணவ மாணவி ஆகியோர் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். தேனிலவு தம்பதியினர் உள்ளிட்டோரும் புரிந்தனர். கூட்டம் அதிகரிப்பால் தாவரவியல் பூங்கா முகப்பில் நுழைவு சீட்டு பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது

News October 21, 2025

மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்.பி

image

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா., இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

News October 21, 2025

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நீலகிரி மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

error: Content is protected !!