News November 10, 2024
தொடரை கைப்பற்றுமா இந்திய அணி

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தெ.ஆப்பிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்தப் போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணி; சாம்சன் (wk), அபிசேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ஹிருத்திக் பாண்டியா, ரிங்கு சிங், அஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண்.
Similar News
News December 11, 2025
தீயில் உடல் கருகும் போது தாய்லாந்துக்கு டிக்கெட்

<<18509384>>கோவா இரவு விடுதியில்<<>> 25 பேர் உடல் கருகி பலியாகிக் கொண்டிருந்த சமயத்தில், விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு விமான டிக்கெட் புக் செய்தது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிய நள்ளிரவு 1:17 மணிக்கு டிக்கெட் புக் செய்து, அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்து தப்பி ஓடியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளும் வீட்டு வேலைக்காரருடையது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News December 11, 2025
Cinema Roundup: VDK-க்கு வில்லனாகும் VJS

*விஜய் தேவரக்கொண்டாவிற்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல். *‘மாமன்’ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் *அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ‘கொட்டுக்காளி’ அன்னா பென் நடிக்கிறார். *அறிமுக இயக்குநர் படத்தில் மீண்டும் ஆதித்யா பாஸ்கர் – கவுரி கிஷன் ஜோடி சேர உள்ளனர். *‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கும் படத்திற்கு ‘29’ என பெயரிடப்பட்டுள்ளது.
News December 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 546 ▶குறள்: வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். ▶பொருள்: நீஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.


