News December 13, 2025

தொடரும் வேட்டை.. 10 மாவோயிஸ்ட்கள் சரண்

image

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்களை அகற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, சத்தீஸ்கரில் நேற்று 6 பெண்கள் உள்பட 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ₹33 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 11 மாதங்களில், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மட்டும் 1,514 பேர் சரணடைந்துள்ளனர்.

Similar News

News March 10, 2026

ராசி பலன்கள் (10.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 10, 2026

T20I WC: இதுதான் Team of the Tournament

image

T20I WC-ல் சிறப்பாக விளையாடிய வீரர்களை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட அணியை ICC வெளியிட்டுள்ளது. சஞ்சு சாம்சன், சாஹிப்சாதா ஃபர்ஹான்(PAK), இஷான் கிஷன், மார்க்ரம் (கேப்டன்- SA), ஹர்திக் பாண்ட்யா, வில் ஜாக்ஸ்(ENG), ஜேசன் ஹோல்டர்(WI), பும்ரா, இங்கிடி(SA), அடில் ரஷித்(ENG), பிளெசிங் முசரபானி (ZIM). 12-வது வீரராக ஷேட்லி வேன் ஷால்க்வைக் (USA) சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

News March 10, 2026

விஜய் நாளைக்கு டெல்லி செல்ல வேண்டாம்!

image

டெல்லி CBI அலுவலகத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர வழக்கு விசாரணை தொடர்பாக நாளை ஆஜராகுமாறு இன்று அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், தேர்தல் பணி இருப்பதால் விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்று விஜய் நாளை CBI அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!