News February 24, 2026
தொகுதிப் பங்கீடு: திமுக – காங் இடையே இழுபறி

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 41 தொகுதிகள் வேண்டும் என காங்., விடாப்பிடியாக இருக்கும் நிலையில், திமுகவோ அதிகபட்சமாக 27 மட்டுமே தர முடியும் என கூறிவிட்டதாம். இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், மறுபுறம் சிபிஐ, விசிக, மதிமுகவும் கூடுதல் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News March 3, 2026
கூட்டணி.. பாஜகவுடனான பங்கீடு மாறுகிறதா?

பாஜகவுடன் சென்னையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் EPS நேற்று டெல்லி சென்றார். அங்கு இரவில் அமித்ஷாவைச் சந்தித்த அவர், சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், பாஜக கேட்கும் 30 சீட்களில் 20 – 22 வரையே கொடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை EPS எடுத்துரைத்திருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீட் கணக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

‘ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்’
பொருள்: கல்வி, ஞானம் மற்றும் வாக்குவன்மைக்கு அதிபதியாக விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளை நான் தியானிக்கிறேன். அந்த ஞானத்தின் வடிவமானவர், எனது அறிவை ஒளிரச் செய்து, உயர்ந்த அறிவாற்றலை அருளட்டும். SHARE IT.
News March 3, 2026
விஜய்யை அட்டாக் செய்த கொங்கு ஈஸ்வரன்

விஜய்-சங்கீதா விவாகரத்து விஷயத்தில் அரசியல் கட்சியினர் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், விஜய்யை மறைமுகமாக கொங்கு ஈஸ்வரன் MLA விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக ஒருத்தர் கிளம்பி இருக்கிறார்; ஆனால் அவரால் சொந்த மனைவிக்கே பாதுகாப்பு தர முடியவில்லை என்றார். இதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.


