News November 23, 2025
தைவானை தாக்க தயாராகும் சீனா

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Similar News
News February 11, 2026
தமிழகம் முழுவதும் SIR பணிகள் முடிவடைந்தன!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR பணிகளின் போது சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிச.19 முதல் இன்று (பிப்.10) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி SIR பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
News February 11, 2026
செங்கோட்டையனின் பரிதாப நிலை: திண்டுக்கல் சீனிவாசன்

சமீபத்தில் EPS-ஐ சீண்டிய செங்கோட்டையனை திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் முதன்மையானவராக இருந்த செங்கோட்டையனின் தற்போதைய நிலையை பார்த்தால் பரிதாபமாகவும் கஷ்டமாகவும் இருப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் முதலிடத்தில் இருந்த மாபெரும் மனிதரை (KAS) தவெகவில் 5-ம் இடத்தில் உட்கார வைத்துள்ளனர்; இதையெல்லாம் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது என்றார்.
News February 11, 2026
சீட் இல்லையென்றால் கவலை வேண்டாம்: விஜய்

மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவெகவில் இணைந்ததால் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு கூட சீட் கிடைக்காத சூழல் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், இன்று நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் ‘வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வருத்தப்படக்கூடாது’ என விஜய் கூறியுள்ளார். வேட்பாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவும், ஒரு தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.


