News August 15, 2025
தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி திடீர் விசீட்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தொட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி, தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அன்புமணியின் தாயார் சரஸ்வதிக்கு இன்று(ஆக.15) பிறந்தநாள் என்பதால் ஆசிர்வாதம் பெற சென்றதாக தகவல். ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.
Similar News
News August 16, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
விழுப்புரம் சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளர் விருது

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அருகே உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் இன்று (ஆக.15) 79-வது சுதந்திர தின விழாவில் கொண்டாடப்பட்டது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கு சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வழங்க, காவல் கண்காணிப்பாளர் சரவணன், கூடுதல் ஆட்சியர் பத்மஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
News August 15, 2025
விழுப்புரம்: கலைத்துறையில் வளர இங்கு போங்க!!

விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் கிராமம் எனும் பகுதியில் அமைந்துள்ள சிவலோகநாதரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இத்தலம் குறித்து தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள அம்பாலை வழிபடுவதன் மூலம் நடனம், இசையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. கலைத்துறையில் ஈடுபாடுள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க