News April 14, 2025
தைலகாப்பு அலங்காரத்தில் காட்சி தரும் தோணியப்பர்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாய காட்சியாக தோணியப்பர்-உமா மகேஸ்வரி தாயாராக அருள் பாலிக்கின்றனர். அவர்களுக்கு ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே தைலக்காப்பு எனும் சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று தோனியப்பர் உமாமகேஸ்வரி தாயாருக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Similar News
News November 4, 2025
மயிலாடுதுறை: ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் உடன் இருந்தார்.
News November 4, 2025
மயிலாடுதுறை: ஒரே மாதத்தில் 180 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையால் கடந்த அக்டோபர் மாதம் குட்கா பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சுமார் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய 43 பேர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 180 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 4, 2025
மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

மயிலாடுதுறையில் மாவட்டத்தில் 31 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


