News January 30, 2026

தைரியம் இருந்தால் புடின் உக்ரைன் வரலாம்: ஜெலன்ஸ்கி

image

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது. இதனை மறுத்துள்ள ஜெலன்ஸ்கி, துணிச்சல் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த புடின் உக்ரைனுக்கு வரலாம் என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, நாங்களும் நிறுத்துவோம் எனவும் போரை முடிவுக்கு கொண்டு வரவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News February 11, 2026

EPS வண்டவாளம் இவர்களுக்கு தெரியும்: சேகர்பாபு

image

EPS வாயில் பொய்யைத்தவிர எதுவும் வராது என அமைச்சர் சேகர் பாபு சாடியுள்ளார். பொய்யிலே பிறந்து வளர்ந்து வந்தவர் EPS என்ற அவர், செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணனிடம் கேட்டால் எடப்பாடி பழனிசாமியின் வண்டவாளம் தெரியவரும் என கூறியுள்ளார். மேலும், எதிர்க்கட்சியினர் அரண்டு போகிற அளவுக்கு இடைக்கால பட்ஜெட் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

பெண்களின் பிறப்புறுப்பை தாக்கும் வைரஸ்

image

பெண்களின் பிறப்புறுப்பை முக்கியமாகத் தாக்கும் வைரஸ்களில் பாப்பிலோமா வைரஸ் (HPV) உள்ளது. HPV பிறப்புறுப்பு மருக்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதேசமயம் HSV(Herpes Simplex Virus) பிறப்புறுப்பு பகுதியில் வலிமிகுந்த கொப்புளங்கள் மற்றும் புண்களை ஏற்படுத்துகிறது. எனவே பிறப்புறுப்பில் கொப்புளங்கள், புண்கள் (அ) மருக்கள் இருந்தால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவது நல்லது. SHARE IT.

News February 11, 2026

ராமதாஸ் பெயரில் புதிய கட்சி

image

பாமக​வும், மாம்​பழமும் அன்​புமணி கட்​டுப்​பாட்​டில் இருக்கிறது, கூட்டணியும் கைகூடவில்லை என்பதால் ராமதாஸ் தரப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் தரப்பில் உள்ள அன்​பழ​க​னின் மகன் முகிலன் தலை​மை​யில் “அய்யா பாட்​டாளி மக்கள் கட்​சி” என்ற புதிய கட்சி உரு​வாகி​யுள்​ளதாம். தேர்​தலில் அன்​புமணி நிறுத்​தும் வேட்​பாளர்​களுக்கு எதிராக வேட்பாளர்களை இறக்குவதே கட்சியின் இலக்கு என்கின்றனர்.

error: Content is protected !!