News January 6, 2026
தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மி. அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது 150 மி. சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்தால் கஷாயம் ரெடி. இந்த மந்தாரை கஷாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 11, 2026
5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையிலும் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் காலை 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
விலை ₹6,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பொங்கல் திருநாளை முன்னிட்டு யமாஹா பைக்குகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சந்தைக்கு வந்துள்ள XSR155 பைக்கின் அறிமுக விலை ₹1.5 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இதன் விலை, வரும் நாள்களில் அதிகரிக்கக்கூடும். எந்தெந்த மாடல் பைக்குகளுக்கு என்னென்ன சலுகை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த பைக் வாங்க போறீங்க?
News January 11, 2026
இனி விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்!

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்தை கடந்த 2025 ஆகஸ்ட்டில் CM ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்தால், வங்கி மேலாளர் சரிபார்ப்புக்கு அரை மணி நேரத்தில் சென்று, சில மணி நேரங்களில் வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும்.


