News December 21, 2025
தைப்பூச விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்பாரா? வானதி

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற CM ஸ்டாலின் தைப்பூச விழாவில் பங்கேற்பாரா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூட சொல்வதில்லை. இது மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா? என அவர் விமர்சித்துள்ளார். <<18626193>>நெல்லையில் நேற்று<<>> நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 21, 2025
25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நெல்லையப்பர் வெள்ளித்தேர்!

வரும் ஜனவரியில் நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை அரசு விழாவில் பேசிய அவர், கலைஞர் வழியில் இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, 1991-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த வெள்ளி தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என உறுதியளித்துள்ளார்.
News December 21, 2025
ஆண்டுக்கு ₹5 லட்சம் இலவச காப்பீடு பெறுவது எப்படி?

<
News December 21, 2025
தமிழ் என்றாலே திமுகதான் என நினைக்கின்றனர்: CM

தமிழ், தமிழர்கள் மீது சிலர் வெறுப்புடன் செயல்படுவதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழர்களின் வரலாற்று தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் நடக்கக்கூடாது என மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறிய அவர், இதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நம்மை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் கூட தமிழ் என்றாலே திமுகதான் என்று மனதுக்குள் நினைக்கின்றனர் எனவும் அவர் பேசியுள்ளார்.


