News February 11, 2025

தைப்பூசம்- காளிப்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, இன்று (பிப்.11) சேலம் மாவட்டம், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், ஆட்டையாம்பட்டி வழியாக காளிப்பட்டி கந்தசாமி முருகன் திருக்கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 14, 2026

BREAKING: நாளை சேலம் வருகிறார் கமல்ஹாசன்!

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை (15-04-2026) சேலத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் M.P. கலந்து கொள்ள உள்ளார் என அக்கட்சி அறிவிப்பு: நாளை மாலை 5 மணியளவில் அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கும் இந்தப் பேரணி, கோட்டை மைதானத்தில் நிறைவடையும்

News April 14, 2026

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 14, 2026

JUST IN: நாளை சேலம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

நாளை (15.04.2026) தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை 4:30 மணிக்கு சேலம் வரும் தமிழக முதல்வர், அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து கோட்டை மைதானம் வரை நடைபெறும் பிரம்மாண்ட மகளிர் பேரணியில் நடந்து செல்லும் அவர், பொதுக்கூட்டத்தில் 11 தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!