News December 14, 2024
தேவைப்பட்டால் நேரில் ஆய்வு: துணை முதலமைச்சர்

தென் மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டால் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நானும் வருவேன் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் பாதிப்புகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் நானும் தென் மாவட்டத்திற்கு விரைந்து செல்வேன் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
Similar News
News April 10, 2026
தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 10, 2026
தூத்துக்குடி மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி தூத்துக்குடி தொகுதியில் 15 பேர், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 13 பேர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 பேர், திருச்செந்தூர் தொகுதியில் 13 பேர், விளாத்திகுளம் தொகுதியில் 15 பேர், கோவில்பட்டி தொகுதியில் 21 பேர் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (39) என்பவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். இந்நிலையில் அவர் குரும்பூர் அங்கமங்கலம் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


