News July 13, 2024
தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டார்.
Similar News
News November 8, 2025
தேனி: ஆற்றங்கரையில் முதியவர் உடல் மீட்பு.!

சின்னமனூர் அருகே எல்லப்பட்டி பகுதியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றங்கரையில் நேற்று (நவ.7) முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கம்பம் பகுதியை சேர்ந்த மாயாண்டி (75) என்பதும், இவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
News November 8, 2025
தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
தேனி: இளைஞர் தற்கொலை

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (34). இதனால் குடிப்பழக்கத்திற்கு சசிகுமார் அடிமையாகி உள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.7) வழக்கு பதிவு செய்துள்ளனர்.


