News June 9, 2024
தேர்வு மையங்களை பார்வையிட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் 228 தேர்வு மையங்களில் அரசு பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி இன்று(09.06.2024) பார்வையிட்டார்.
Similar News
News September 15, 2025
வத்தலக்குண்டில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது

வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கஞ்சா வியாபாரியான லட்சுமிநாராயணன் (42) என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி, பின் பேருந்து மூலம் வத்தலகுண்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.14) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
திண்டுக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <