News August 26, 2024
தேர்வு நடத்த கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயதுவரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 6, 2026
விழுப்புரம்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

விழுப்புரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*
News March 6, 2026
பள்ளி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை ஆட்சியர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ்,பள்ளி மாணவிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெற்றது. இதை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (மார்ச்.06) பார்வையிட்டார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சா.செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.
News March 6, 2026
2025-2026 கீழ் மாணவர்கள் பயிலும் குடில்கள்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2025-2026 கீழ் மாணவர்கள் பயிலும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் இன்று (மார்ச்.06) திறந்து வைத்தார்.


