News April 9, 2025
தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News July 11, 2025
2 நாள்கள் பயணமாக தமிழகம் வரும் PM மோடி

வரும் 27, 28-ம் தேதிகளில் 2 நாள்கள் பயணமாக PM மோடி தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடக்கும் ஆடித் திருவாதிரை திருவிழாவில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News July 11, 2025
அகமதாபாத் விமான விபத்தில் முதல் அறிக்கை வெளியாகிறது

அகமதாபாத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி 260 பேர் உயிரைப் பலி வாங்கிய விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கை இன்று வெளியாகிறது. முதல் முறையாக விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை AAIB, தனது அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பித்தது. உலகையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இன்று வெளியாகவுள்ள அறிக்கைக்காக நாடே காத்திருக்கிறது.
News July 11, 2025
20 தொகுதிகள்… திமுகவை நெருக்கும் மதிமுக

20 தொகுதிகளை ஒதுக்கக்கோரி திமுகவை மதிமுக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மதிமுக உள்ளது. இதை சுட்டிக்காட்டி அண்மைகாலமாக மதிமுக பேசி வருகிறது. மு.க. ஸ்டாலினிடம் 20 தொகுதிகள் பட்டியலை அளித்து, இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்கும்படி வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.