News April 17, 2024
தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நிறைவு

தேனி மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணி அல்லிநகரம் நகராட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Similar News
News August 19, 2025
தேனி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தேனி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9894854837 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 19, 2025
தேனியில் 296 கடைகளுக்கு சீல் வைப்பு

தேனி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 255 கிலோ கஞ்சா, 163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 271 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புகையிலை விற்பனை செய்த 296 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.75, 25,000 அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 2042.86 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 35 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர் என தேனி எஸ்பி சினேகா சினேஹாபிரியா தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (ஆக.19) நீர்மட்டம்: வைகை அணை: 69.65 (71) அடி, வரத்து: 735 க.அடி, திறப்பு: 869 க.அடி, பெரியாறு அணை: 134.85 (142) அடி, வரத்து: 2769 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.