News March 25, 2024
தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
News February 6, 2026
திருவாரூரில் முதன்மை தேர்வு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 8 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தொகுதி 1 மற்றும் 2 A முதன்மை எழுத்துத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேலைகளிலும், தலா 239 நபர்கள் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.5) இரவு 10 மணி முதல், (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


