News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

மதுரை: லாரி பின் சக்கரத்தில் சிக்கி கொடூர பலி

image

கருங்காலக்குடி அருகே கச்சிராயன்பட்டியை சேர்ந்தவர் வீரணன்(70). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு மேலூர் மதுரை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அம்பலகாரன்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 22, 2025

மதுரை: பிரேக் அடித்த லாரி; டூவிலரில் வந்த இளைஞர் பலி

image

வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த தேசிகன்(19). கன்னியாகுமரியை சேர்ந்த சானியா(19) என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு மதுரை – திண்டுக்கல் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார். அப்போது மேம்பாலத்தில் முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட, பின்னால் சென்று டூவீலர் அதில் மோதியது. இதில் தேசிகன் சம்பவ இடத்திலே பலியாக, சானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!