News March 25, 2024
தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2025
இது இல்லைனா அபராதம் தான்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 20, 2025
விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க

திருவெண்ணெய்நல்லூர்-04153-290893, கண்டாச்சிபுரம்-04153-231666, மேல்மலையனூர்-9942248808, 04145-234209, மரக்காணம்-9445461915, 04147-239449, விக்கிரவாண்டி-9445461837, 04146-233132, வட்டாட்சியர், வானூர்-9445000526, 0413-2677391, விழுப்புரம்-9445000525, 04146-222554, செஞ்சி-9445000524, 04145-222007, திண்டிவனம்-9445000523, 04147-222090. *