News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து கல்வராயன் மலை பகுதிக்கு வெள்ளி மலை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில், எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வருவதாகவும், கல்வராயன் மலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News July 5, 2025
இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04151-222383) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*