News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

செட்டிபாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

சேலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் பீளமேட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது அக்கா ஆனந்தி என்பவரது வீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிவேல், பின் பைக்கில் செட்டிபாளையம் – போத்தனூர் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன் சென்ற லாரியின் ஓட்டுநர், திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய பழனிவேல், லாரியின் பின்புறத்தில் மோதி உயிரிழந்தார்.

News January 29, 2026

கோவை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

BREAKING: கோவையில் தங்க கட்டிகள் கடத்தல்

image

வாளையார் சோதனைச் சாவடி வழியாகத் தங்கம் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தை வழிமறித்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் பயணித்த நிபின் (29) என்ற இளைஞரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின், அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!