News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பாஜக கண்டனம்

image

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இச்செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் டிசம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வல்லநாடு, கலியாவூர், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்தடை ஏற்படும். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கூறியுள்ளார்.

error: Content is protected !!