News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2025
ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
News April 3, 2025
திருவண்ணாமலையில் வெப்பநிலை அதிகரிக்கும்

தி.மலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும். இந்நிலையில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். *பாதுகாப்பா இருங்க மக்களே. நண்பர்களையும் எச்சரியுங்கள்*
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <