News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்த நிர்வாகிகள்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் முன்பும், அரசு மருத்துவமனை முன்பும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு சாதகமற்ற ஆபத்தான சூழ்லில் உள்ளது. இதனை உடனே சரி செய்யக்கோரி உத்தமபாளையம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நகர தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.

News August 13, 2025

தேனியில் சிறுமி உயிரிழப்பு

image

கூடலுார் பகுதியை சேர்ந்த அரவிந்தனின் மகள் சிவானி (11). பள்ளி மாணவியான இவர் அதே பகுதியில் உள்ள இவரது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன் தினம் பாட்டி வீட்டில் உள்ள சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுமி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் சிறுமி கழுத்தை இறுக்கியது. இதில் சிறுமி உயிரிழந்தார். இதுக்குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!