News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2025
தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 15ம் தேதி நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட அளவில் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் டிசம்பர் 15ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ /dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ / 6379090205, 044 – 27426554 தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News April 10, 2025
மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க
News April 10, 2025
பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் 15.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.