News April 7, 2024
தேர்தல் வாகனம் மீது டிராக்டர் மோதியது

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்பு குழுவினரின் ஜீப் இன்று புலிவலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர் தேர்தல் அதிகாரி வந்த ஜீப் மீது மோதியது. இதில் டிரைவர் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
சோளிங்கரில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய எம்.எல்.ஏ

சோளிங்கர் பகுதியில் உள்ள தகரக்குப்பத்தை சேர்ந்த சந்தியா, மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர், சோளிங்கர் பகுதியை சேர்ந்த சரிகா, ரக்சா, லட்சுமி, ராஜேஷ் ஆகிய 6 கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி சோளிங்கர் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதன்பேரில் அவர் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகளை நேற்று வழங்கினார்.
News July 7, 2025
லாலாபேட்டை உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்

லாலா பேட்டை உழவர் சந்தையில் இன்று ( ஜூலை-07) காய்கறி விலை ஒரு கிலோவில் தக்காளி ரூ.28, உருளை ரூ.28, சின்ன வெங்காயம் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.28, மிளகாய் ரூ.45, கத்திரிக்காய் ரூ.35, வெண்டை ரூ.40, முருங்கை ரூ.50, பீர்கங்காய் ரூ.35, சுரக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.45-50, தேங்காய் ரூ.15-30, முள்ளங்கி ரூ.30, பீன்ஸ் ரூ.56-80, அவரை ரூ.58, கேரட் ரூ.42 என விற்பனை செய்யப்படுகிறது.
News July 7, 2025
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்று (ஜூலை7) காய்கறி விலை (1kg) தக்காளி ரூ.25-27, உருளை ரூ.28-32, சின்ன வெங்காயம் ரூ.55-60, பெரிய வெங்காயம் ரூ.25-27, கத்திரிக்காய் ரூ.35-40, வெண்டை ரூ.40, முருங்கை ரூ.45-50, சுரக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.50-60, பீர்கங்காய் ரூ.25-35, தேங்காய் ரூ.25-30, முள்ளங்கி ரூ.25-30, பீன்ஸ் ரூ.55-80, அவரை ரூ.55, கேரட் ரூ.40-60 என விற்பனையாகிறது