News December 26, 2025
தேர்தல் வந்தாலே ‘ICE’-ஐ ஏவும் பாஜக: கனிமொழி

தேர்தல் நெருங்கும்போது ICE ( IT, CBI, ED) அமைப்புகளை களமிறக்குவதை பாஜக வழக்கமான தேர்தல் வியூகமாக வைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். TOI-க்கு அளித்த பேட்டியில், பாஜகவின் B டீமாக அதிமுக செயல்படுவதாகவும், அக்கட்சியின் கடைசி ஆண்டாக இந்தாண்டு இருக்காது என நம்புவதாகவும் அவர் கூறினார். திமுகவுக்கு எதிரான விஜய்யின் பேச்சுக்கள் பாஜகவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 28, 2025
புத்தாண்டு ராசிபலன் 2026: மேஷம்

புத்தாண்டின் போது லாப ஸ்தானத்தில் ராகு, ராசியதிபதி செவ்வாய் ஆகியோர் குரு பார்வை பெற்றிருப்பதாலும், தன ஸ்தானத்தில் உச்ச சந்திரன் இருப்பதாலும் மலைபோல் வந்த தடைகள் பனி போல் அகலும். *குடும்ப உறவுகளுடன் அமைதியான போக்கை கையாளவும் *பண வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டு *உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள் *அரசுத் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் *உணர்வுபூர்வ முடிவுகளை விட, அறிவுப்பூர்வ முடிவுகளே சிறந்தது
News December 28, 2025
தனியா? அணியா? விஜய் சூசகம்

தேர்தல் கூட்டணி குறித்து ‘ஜனநாயகன்’ விழாவில் தனது நிலைப்பாட்டை விஜய் சூசகமாக கூறியுள்ளார். எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்றும், 33 ஆண்டுகளாக மக்களுடன் இருப்பதால் அதுவும் ஒரு மிகப்பெரிய அணிதானே எனவும் பேசினார். இதில் சஸ்பென்ஸ் வைத்தால் தான் கிக் இருக்கும் எனக் கூறிய விஜய், இதை கைதட்டலுக்காக பேசவில்லை மனதில் இருந்து மக்களுக்காக பேசுகிறேன் என தெரிவித்தார். கூட்டணியை தான் அணி என்று கூறுகிறாரோ?
News December 28, 2025
மார்கழி மாத கலர் கோலங்கள்!

வளைத்து, நெளித்து, சுழித்து போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுக, துக்க பின்னல்களால் நிறைந்தவை என்பதையும், சுழிகள் போல் துன்பம் வந்தாலும் துணிவுடன் இருக்கவேண்டும் என்ற தைரியத்தையும் உணர்த்துகின்றன. எனவே, மார்கழி மட்டுமல்ல வருடத்தின் 365 நாள்களும் கோலமிட தவறாதீர்கள். அந்த வகையில் சில ஸ்பெஷலான கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.


