News April 2, 2024

தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா அருகில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் “எடப்பாடி” பழனிசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் டாக்டர். பசுபதி அவர்களுக்கு வாக்குகளை சேகரித்தார்.

Similar News

News August 15, 2025

வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய கலெக்டர்!

image

இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவையொட்டி, இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 15, 2025

வேலூரில் +2, டிகிரி படித்தவர்களுக்கு இலவச பயிற்சி!

image

வேலூர் மக்களே, AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், AI ஆராய்ச்சி அசோசியேட் ஆகிய பதவிக்கு ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெற ஏற்பாடு செய்யப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News August 15, 2025

வேலூர்: இந்தியாவின் அடையாளம்!

image

வேலூர் சிப்பாய் கலகம் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ல் நடைபெற்றது. இது இந்தியாவின் முதல் சுதந்திர கிளர்ச்சி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த கலகத்திற்கு முக்கியமான காரணம், சிப்பாய்களின் மத உணர்வுகளை புறக்கணித்து, புதிய உடை விதிகளை பிரித்தானியர்கள் கட்டாயமாக்கியது ஆகும். இதில், 200க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த 79-வது சுதந்திர தினத்தில் வேலூர் புரட்சியை நினைவு கூர்வோம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!