News March 22, 2024
தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் அறிவிப்பு

ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக கணேஷ்குமார் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பா.ம.க சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 8, 2026
பர்வதமலை ஏற கடும் கட்டுப்பாடு- அது என்னென்ன?

தி.மலை மாவட்டத்தில் உள்ள பருவதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1) பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி. 2) 18 -60 வயதுடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 3) ஒரு நாளைக்கு தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 800 பேருக்கு அனுமதி. 4) வரும் முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்.
News February 8, 2026
தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.